இளமையும், அழகும் இருந்தால் மட்டுமே நடனமாட முடியும் என்ற நிலையை மாற்றி திறமை இருந்தால் எந்த வயதிலும் நடனமாடலாம் என 100 வயது பெண் நிரூபித்து வருகிறார். அவரது பெயர் எய்லீன் கிரமர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் 100 வயதிலும் இன்னும் நடனமாடி வருகிறார். பலருக்கு நடனம் கற்றுக் கொடுத்து பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
இவரது நடனத்துக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல மவுசும், ஆதரவும் உள்ளது. பலர் இவரிடம் நடன பயிற்சியும் மேற்கொள்கிறார்கள்.
100 வயதிலும் நடனமாடுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘‘எனக்கு 100 வயது ஆகிறதா என சிரித்தபடி கேட்டார். மேலும், வயதாகி விட்டதாக நான் ஒரு போதும் கருதவில்லை. திறமை, பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் நடனமாட முடிகிறது’’ என்றார்.
இவர் தனது 24 வயதில் இருந்து மேடைகளில் நடனமாடி வருகிறார்.