செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 67 பேர் பலி நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 67 பேர் பலி

நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 67 பேர் பலி நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 67 பேர் பலி

1 minutes read

நேபாளம் மற்றும் இந்தியாவின் பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், நேபாளத்தில் 50 பேரும், இந்தியாவில் 17 பேரும் பலியாகினர். மேலும், இரு நாடுகளிலும் 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் இருந்து கிழக்கே 83 கிலோ மீட்டர் தொலைவில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் அருகே 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவுக்கு செவ்வாய்க்கிழமை பகல் 12.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது.
அதைத் தொடர்ந்து, 6.3 என்ற அளவில் மிகப்பெரிய நிலஅதிர்வு ஏற்பட்டது. பின்னர், ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
கடந்த மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தால் பேரழிவுகளைச் சந்தித்த நேபாளத்தின் தோலகா, சிந்துபால் சௌக் மாவட்டங்களில் இந்த நிலநடுக்கத்தால் மீண்டும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்துக்கு குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும், 1,117 பேர் காயமடைந்ததாகவும் நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்களில் மருத்துவக் குழுக்களை அனுப்பி வைத்திருப்பதாக நேபாள தேசிய பேரிடர் மீட்பு செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
நேபாளத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 8 ஹெலிகாப்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 27 பேரை பத்திரமாக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மீட்டது. செனமங்கலில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனையில் நிலநடுக்கத்தில் காயமடைந்தோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காத்மாண்டு விமான நிலையம் மூடல்: நேபாளத்திலுள்ள ஒரே விமான நிலையமான காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக மூடப்பட்டது. காத்மாண்டுக்கு வந்த அனைத்து விமானங்களும் திருப்பிவிடப்பட்டன. இதேபோல், நேபாளத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் அடுத்த 2 வாரங்களுக்கு விடுமுறையை அந்நாட்டு அரசு அறிவித்தது.
தலைநகர் காத்மாண்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வெட்ட வெளிகளில் தஞ்சமடைந்தனர். சிலர் பயத்தின் காரணமாக கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்தியாவில் 17 பேர் சாவு: நேபாளத்தில் நேரிட்ட நிலநடுக்கம், இந்தியாவில் ஹிமாசலப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிஸô, தில்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது. கேரள மாநிலம் கொச்சி, சென்னை ஆகிய இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவில் நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் காயமடைந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.