1
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்பஜன் கெüர் தீர் (62) லண்டனின் துணை நகரமான ஈலிங் மாநகராட்சி மேயராக செவ்வாயக்கிழமை பதவியேற்றார்.
இதன்மூலம், பிரிட்டனில் மேயராகப் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பது மட்டுமன்றி, முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் ஹர்பஜன் கெüர் தீர்
பெற்றுள்ளார்.
அவரது கணவர் ரஞ்சித் தீர் ஏற்கெனவே ஈலிங் மேயராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.