செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா

6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா6,300 இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஊடுருவ முயன்றதாக கைது | அமெரிக்கா

1 minutes read

கடந்த 2013, 2014-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக 6,360 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து 567 இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அமெரிக்க நாட்டின், “தகவல் சுதந்திரச் சட்டத்தின்’ கீழ் வட அமெரிக்க பஞ்சாபியர்கள் கூட்டமைப்பு கோரியிருந்த கேள்விகளுக்கு அந்நாட்டின், குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அளித்த பதிலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகளால் கடந்த 2013-ஆம் நிதியாண்டில் 4,057 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2,539 பேர் பரோல் அல்லது பிணைப் பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டில் அமெரிக்க எல்லையில் ஊடுருவ முயன்றவர்களின் எண்ணிக்கை 2,306 என்று கூறப்படுகிறது. இதே ஆண்டில் 2,300 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் இருந்து, 2013-ஆம் ஆண்டில் 286 இந்தியர்களும், 2014-ஆம் ஆண்டில் 281 இந்தியர்களும் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.