கயானா கூட்டுக்குடியரசின் பிரதமராக, தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, வரும் 26ம் தேதி பதவியேற்கிறார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து பல நாடுகளுக்கும், கரும்பு விவசாயம் மற்றும் தேயிலை விவசாய கூலிகளாக, தமிழர்கள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படி, தமிழர்கள் குடியேறிய நாடுகளில், தென் அமெரிக்காவில் உள்ள கயானாவும் ஒன்று.
கயானாவின் மொத்த மக்கள் தொகையில், 44 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்; இவர்களில் தமிழர்கள், 3 சதவீதம் பேர். இந்நிலையில், சமீபத் தில், கயானாவில் நடந்த பிரதமர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான மோசஸ் வீராசாமி நாகமுத்து, பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்; வரும் 26ம் தேதி அவர் பதவியேற்கிறார். கயானாவில் உள்ள தமிழர்கள் ஆதரவோடு பிரதமராகியுள்ள, மோசஸ் வீராசாமி நாகமுத்துவிற்கு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.