செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போராட்டங்களை நடத்த தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவுபோராட்டங்களை நடத்த தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களை நடத்த தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவுபோராட்டங்களை நடத்த தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

1 minutes read

இலங்கையில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது என அந்நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத்தீவு பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி யாழ்ப்பாணம் பகுதியில் புதன்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 130 பேரை விடுவிக்க வலியுறுத்தி அங்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் எந்தவிதமான போராட்டங்களையும் நடத்த தடை விதித்து இலங்கை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொண்டு சென்ற போது அவர்கள் மீது யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.