செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்! தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்!

தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்! தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்!

1 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக, ஆஸ்திரேலியப் பெண் தனது இரு குழந்தைகளைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்:
முஸ்லிம் மதத்துக்கு மாறியவரான ஜாஸ்மினா மிலோவனோவ் (26), தனது இரு குழந்தைகளுடன் சிட்னி நகரில் வசித்து வந்தார்.
அவரது முன்னாள் கணவர், துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்.
இந்தச் சூழலில், இந்த மாதத் தொடக்கத்தில், புதிதாகக் கார் வாங்கவிருப்பதாகக் கூறி, செவிலித் தாயிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டுச் சென்ற ஜாஸ்மினா மிலோவனோவ், அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை.
அதனைத் தொடர்ந்து, தனது முகநூல் சமூக வலைதளத்தில் “நான் தற்போது ஷாம் (சிரியா) நகரில் இருக்கிறேன்’ என்று ஜாஸ்மினா பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர், துருக்கியிலுள்ள தனது முன்னாள் கணவருக்கு, “நான் “மதப் போர் வீரர்’ ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நீங்கள் ஆஸ்திரேலியா திரும்பி குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது முன்னாள் கணவர் கூறுகையில், “”ஜாஸ்மினாவின் குறுந்தகவலைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இவ்வளவு அழகான குழந்தைகளை அவளால் எப்படி விட்டுச் செல்ல முடிந்தது என்பதை இன்னமும் புரியவில்லை” என்றார்.
பயங்கரவாதிகளுடன் இணைவதற்காக ஜாஸ்மினா கைவிட்டுச் சென்ற ஒரு குழந்தைக்கு 7 வயதும், மற்றொரு குழந்தைக்கு 5 வயதும் ஆகின்றன.
முகநூல் வலைதளத்தில் ùஸஹ்ரா துமன் என்ற பெண்ணுடன் ஜாஸ்மினா நட்பு கொண்டிருந்ததாகவும், ஐ.எஸ். அமைப்புக்கு பெண் ஆட்களை சேர்த்து வரும் ùஸஹ்ரா துமன், ஜாஸ்மினாவுக்கு மதவெறியைத் தூண்டி சிரியா வரச் செய்துள்ளதாகவும் தெரிகிறது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.