நைஜீரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது புஹாரி, நாட்டின் 5-ஆவது அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
நைஜீரிய வரலாற்றில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற்று, பதவியேற்கும் முதல் அதிபர் அப்துல் புஹாரி என்பது குறிப்பிடத்தக்கது.
1960-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த நைஜீரியாவில், நீண்ட காலம் ராணுவ ஆட்சியே நடைபெற்று வந்தது.
1999-ஆம் ஆண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய பிறகு அந்த நாட்டில் நடைபெற்று வந்த அனைத்துத் தேர்தல்களிலும் முன்னாள் அதிபர் குட்லக் ஜொனாதனே வெற்றி பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புஹாரி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
போகோ ஹராம் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கும், அவர்கள் கடத்திச் சென்றுள்ள பள்ளி மாணவிகளை மீட்பதற்கும் புதிய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என பதவியேற்பு நிகழ்சியில் பேசுகையில் அவர் தெரிவித்தார்.