செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜபக்ஷ ஷிராந்தியிடம் போலீஸார் விசாரணை ராஜபக்ஷ ஷிராந்தியிடம் போலீஸார் விசாரணை

ராஜபக்ஷ ஷிராந்தியிடம் போலீஸார் விசாரணை ராஜபக்ஷ ஷிராந்தியிடம் போலீஸார் விசாரணை

0 minutes read

இலங்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபட்சவின் மனைவியிடம் அந்நாட்டு போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நிதித்துறை குற்றவியல் பிரிவு வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், “”கார்ல்டன் சிரிலியா சாவியா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக, தலைமையகத்திற்கு வெளியே உள்ள ஓர் இடத்தில் ராஜபட்சவின் மனைவி ஷிராந்தியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்” என்று தெரிவித்தன.
இந்த அறக்கட்டளையின் புரவலராக ஷிராந்தி இருந்து வருகிறார்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக மைத்ரிபாலா சிறீசேனா பதவியேற்றதும், அவரது சகோதரர்களான பசில் ராஜபட்ச, கோத்தபய ராஜபட்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை நிதித்துறை குற்றவியல் பிரிவு அதிகாரிகள் பலமுறை அழைத்து, விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப, சிறீசேனா அரசு முயற்சிப்பதாக ராஜபட்ச குற்றம்சாட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.