சுற்றுலா பயணிகளுக்கான உலகின் தலைசிறந்த அடையாளங்களில் தாஜ்மஹாலுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான டிப்ஸ்களை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயிலை உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாகவும், இரண்டாவது இடத்தில் கம்போடியா நாட்டில் உள்ள அங்கோவாட் ஆலயத்தை இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மகாலை மூன்றாவது இடத்திலும் பட்டியலிட்டுள்ளது.
பல கோடி சுற்றுலா பயணிகளின் தேர்வின் முடிவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் மொகலாய மன்னர் ஷாஜஹானால் 1631 முதல் 1654-ம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்ட தாஜ்மகால், முழுவதும் பளிங்குக் கற்களாலான உருவாக்கப்பட்டது. மனைவி மும்தாஜின் மீது ஷாஜஹான் கொண்டிருந்த காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ் மகால், உலகின் ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் மக்கள் தாஜ்மகாலை கண்டு, களித்து செல்கின்றனர். இவர்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது, குறிப்பிடத்தக்கது.