இங்கிலாந்தை சேர்ந்த 58 வயது பெண் ஜெனிபக்ளேப். இவர் கிறிஸ்து டோப்பர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். அவருடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணவிழா நடந்தது. இங்கிலாந்தில் மணப்பெண் திருமணம் நடக்கும் இடத்திற்கு குதிரைவண்டி அல்லது விலை உயர்ந்த காரில் ஊர்வலமாக வருவது வழக்கம்.
ஆனால் மணப்பெண் ஜெனிபக்ளேப் சவப்பெட்டியில் வந்தார். அவரை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். மணப்பெண் இப்படி வருவது பற்றி மணமகனுக்கு முன்கூட்டி தெரிவிக்கவில்லை. மணப்பெண் சவ ஊர்வலமாக வருவதை பார்த்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சவப்பெட்டியை திறந்தனர். அதற்குள் இருந்து ஜெனிபக்ளேப் எழுந்து வந்தார். அவர்களுக்கு திருமணம் நடந்தது.
இதுபற்றி ஜெனிபக்ளேப் கூறும்போது, எனது சகோதரர் எலும்புகூடு மற்றும் மனிதஉடல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார். அவரை கவுரவிக்கும் வகையில் நான் திருமணத்துக்கு சவப்பெட்டியில் வந்தேன் என்று கூறினார்.