மலேசியாவின் போர்னியோ தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.0 ஆக பதிவானது.
போர்னியோ தீவு, சபா மாவட்டத்தில் உள்ள கோடோ கினாபாலு நகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை