சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரூக் என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட 24 வயது இளைஞரான மிக்கேல் டோட் வுல்ப், ஐ.எஸ் இயக்கத்திற்கு பொருளுதவி செய்த குற்றத்திற்காக, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஹவுஸ்டன் விமான நிலையத்தில் வைத்து எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின் போது இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே ஐ.எஸ் இயக்கத்தில் சேருவது குறித்து திட்டமிடத்தொடங்கியதும், உடற்தகுதிப் பயிற்சியில் பங்கேற்றதும் தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு 7 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் பெடரல் சிறையில் அடைக்கப்பட்டார்.