உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேருக்கு உடலில் நோய் இருப்பதாகவும்,மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஐந்து நோய்கள் இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் அதிர வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
லான்சட் என்ற இதழ் 2013ல் நடத்திய உலகளாவிய நோய்ச்சுமை ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உலகிலேயே 20 பேருக்கு ஒருவர் தான் நோயில்லாமல் இருக்கிறாராம். ஆய்வில் நோய் பிரச்னைகளால் ஆரோக்கியமான வாழ்வை தொலைத்த சராசரி ஆண்டுகள் 1990ல் 21 சதவீதமாக இருந்தது; ஆனால் 2013ல் அது 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கீழ் முதுகு வலி அழுத்தம், இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகை, கழுத்து வலி, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் 1990 மற்றும் 2013 இடைப்பட்ட காலத்தில் மிக அதிகமாக பரவியுள்ளன. இவை தான் பெரும்பாலானோரின் கவலைக்கும் துயரத்திற்கும் காரணமாக இருந்திருக்கின்றன. இதனால் இறப்பு விகிதத்தை விட நோயினால் பாதிக்கப்பட்டு துயரமான வாழ்க்கை வாழும் விகிதம் அதிகரித்துவிட்டது.