இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார்.
அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா தனநாயகே ஆகிய 3 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ராஜபட்ச தலைமையிலான முந்தைய அரசில் ஜெயசூர்யா துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அவர் தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இருந்து கடந்த 2010ஆம் ஆண்டில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நான்கு பேரும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 4 பேர் அண்மையில் பதவி விலகி, அக்கட்சியில் ராஜபட்சவின் கோஷ்டியில் இணைந்தனர்.
அவர்களுக்குப் பதிலாகவே தற்போது ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் அதிபர் சிறீசேனா, கட்சியில் தனது கரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அக்கட்சியில் தற்போதும் ராஜபட்ச அணி பலமுள்ளதாக விளங்குகிறது.
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான 20ஆவது அரசியல்சாசன சட்டத்திருத்தத்தைச் செய்யவும், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வெற்றி பெறவும் கட்சியின் முழு ஆதரவும் அதிபருக்குத் தேவைப்
படுகிறது.
1