செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதிஉலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதி

உலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதிஉலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதி

0 minutes read

பிரிட்டனைச் சேர்ந்த 103 வயதே ஆன ஜார்ஜ் கிர்பி, 91 வயதே ஆன டோரீன் லுக்கியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிர்பி தனது 76 வயதில் லுக்கியை சந்தித்தார். அப்போதுதான் கிர்பி விவகாரத்து பெற்றிருந்தார். லுக்கியின் கணவர் இறந்து 3 ஆண்டுகள் கடந்திருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு 1988ம் ஆண்டு முதல் கடந்த 27 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 7 குழந்தைகள், 15 பேரக் கிழந்தைகள், 7 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை தான் முறைப்படி திருமணம் செய்து கொண்டு தம்பதியாக இணைந்தனர். இதன் மூலம் உலகிலேயே மிக முதிய வயதில் புதுமணத் தம்பதி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.