செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுசூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுசூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

0 minutes read

போர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர், ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வந்துள்ளார். இதனிடையே, அவரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒமர் அல்-பஷீரை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறக் கூடாது என்று பிரெட்டோரியா நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
தென் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு திங்கள்கிழமை நிறைவடைந்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது. சூடானில் 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில், 3 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 25 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.