செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பசில் ராஜபக்ஷவுக்கு ஜாமீன்பசில் ராஜபக்ஷவுக்கு ஜாமீன்

பசில் ராஜபக்ஷவுக்கு ஜாமீன்பசில் ராஜபக்ஷவுக்கு ஜாமீன்

1 minutes read

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே அரசில் பொருளாதார வளர்ச்சி துறை மந்திரியாக இருந்தார்.

அப்போது அரசு பணத்தை தவறான வழியில் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் காட்சிகளும் மாறியுள்ளன.

தற்போது பசில் ராஜபக்சே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் பொருளாதார துறை செயலாளர் நிகால் ஜயதிலகா மற்றும் ரனவாகா, பிந்துலா திலகஸ்ரீ ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யும்படி பசில் ராஜபக்சே உள்ளிட்ட 4 பேரும் கதுவெலா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதை தொடர்ந்து அவர்கள் கொழும்பு ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு பசில் ராஜபக்சே உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.