செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்யேமன் அல்-காய்தா தலைவர் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

1 minutes read

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவரும், யேமன் நாட்டுக்கான அந்த அமைப்பின் தளபதியுமான நஸீர் அல்-வாஹிஷி, அமெரிக்க ஆளில்லா விமானம் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஒசாமா பின்லேடனின் உதவியாளராகச் செயல்பட்டவரான அவரைக் குறிவைத்து, யேமனின் முகல்லா பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் கடந்த வாரம் நிகழ்த்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அல்-காய்தாவின் யேமன் நாட்டுப் பிரிவான “அரேபியத் தீபகற்பத்துக்கான அல்-காய்தா’ (ஏக்யூஏபி) அமைப்பின் ஊடகப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோ அறிக்கையில் அந்தத் தகவலை உறுதி செய்தது.
அல்-காய்தாவின் பிரிவுகளிலேயே, மிகவும் கொடூரமானதாகக் கருதப்படும் ஏக்யூஏபி, அமெரிக்க மண்ணில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பிரிவின் தளபதியான அல்-வாஹிஷி, பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு அல்-காய்தாவின் தலைமையை ஏற்ற அய்மான் அல்-ஜவாஹிரிக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார். நஸீர் அல்-வாஹிஷியின் மரணம், அல்-காய்தாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.