செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போகோஹாரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டுகள் வெடித்து 63 அப்பாவி மக்கள் பலி | நைஜீரியாபோகோஹாரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டுகள் வெடித்து 63 அப்பாவி மக்கள் பலி | நைஜீரியா

போகோஹாரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டுகள் வெடித்து 63 அப்பாவி மக்கள் பலி | நைஜீரியாபோகோஹாரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டுகள் வெடித்து 63 அப்பாவி மக்கள் பலி | நைஜீரியா

1 minutes read

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் நைஜீரியா நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள இவர்கள் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இது தவிர நாட்டின் பல பகுதிகளில் அடுக்கடுக்காக மனித வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி இந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளார். இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் ராணுவப் படைகள் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் மோன்குனோ நகரில் உள்ள போகோஹாரம் முகாமை இன்று கண்டுபிடித்த ராணுவ வீரர்கள் அந்த முகாமின் வாசலில் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை பிரித்துப் பார்க்க முனைந்தனர். அப்போது அந்த மூட்டைக்குள் இருந்த நாட்டு வெடி குண்டுகள் வெடித்து சிதறியதில், அருகாமையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 63 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒருமாதத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய வெடி குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளில் சுமார் 13 ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.