பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரில் கட்டாய திருமணம் செய்வோர் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தற்போது பிரிட்டனில் மொத்தம் 14 லட்சம் இந்தியர்கள், 11.7 லட்சம் பாகிஸ்தானியர்கள், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் அந்நாட்டு பிரஜைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதாக வந்த புகாரையடுத்து கட்டாய திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் வாழும் வெளிநாட்டினரின் விவகாரங்களை கவனித்து வரும் கட்டாய திருமண பிரிவு (போர்ஸ்டு மேரேஜ் யூனிட்) வெளியிட்ட பட்டியலில் பிரிட்டன் பிரஜைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதில் 38.3 சதவீதத்துடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 7.8 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும்
வங்கதேசம், ஆப்கன், சோமாலியா, துருக்கி, இலங்கை ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதற்கும் இத்தகைய கொடுஞ்செயலை தடுப்பதற்காகவும் கட்டாய திருமணம் குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் கேரென் பிரெட்லி கூறியுள்ளார்.பிரிட்டன் நாட்டு சட்டப்படி ஒருவருடைய விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
0