பிரிட்டனில் பிரிட்டிஷ் அரசி வழங்கும் இளம் சாதனையாளர் விருது 3 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.
காமன்வெல்த் நாடுகளில், தாங்கள் சார்ந்த சமூகத்துக்குத் தொண்டாற்றிய இளம் சாதனையாளர்களுக்கு பிரிட்டன் அரசி சார்பில் கடந்த ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான இந்த விருது பக்கிங்ஹம் அரண்மனையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் 60 பேருக்கு வழங்கப்பட்டது.
இவர்களில், இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் அங்காடி (26), தேவிகா மாலிக் (24), அக்ஷய் ஜதாவ் (27) ஆகியோரும் அடங்குவர்.
பெங்களூரில் கண் பார்வையற்றோர் பயன் பெறும் வகையில் அதிக அளவில் பிரெய்லி, ஆடியோ புத்தகங்களை வெளியிடச் செய்தமைக்காக அஞ்சலிக்கும், மகாராஷ்டிரத்தில் கிராமப் பகுதியில் கல்விப் பணி ஆற்றியதற்காக அக்ஷய் ஜதாவுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைகள் அளித்தமைக்காக தேவிகாவுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
0