செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பிரதமர் மோடி மீது வீசப்பட்ட கைத்தொலைபேசி

பிரதமர் மோடி மீது வீசப்பட்ட கைத்தொலைபேசி

0 minutes read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது பாஜக தொண்டர் ஒருவர் கைத்தொலைபேசியை வீசியுள்ளது.

கார்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக கோலார், ராமநகரம், ஹாசன் மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மைசூரில் திறந்தவேனில் ஊர்வலமாக சென்ற பிரதமரை வீதியின் இருபக்கங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

அப்போது, அவர் மீது பூக்களுடன் சேர்த்து கைத்தொலைபேசி வீசப்பட்டுள்ளது. அந்த கைத்தொலைபேசி அவர் மீது படாமல் வேன் சாரதி அமர்ந்திருந்த கூரையின் மீது பட்டு கீழே விழுந்துள்ளது.

இதைக் கண்ட பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி அதிர்ச்சியடைந்த நிலையில், பிரதமர் மோடியும் என்ன நடக்கின்றது என திகைத்த பின்னர், அதை பொருட்படுத்தாமல் ஊர்வலத்தை தொடர்ந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, மைசூர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடி மீது தவறுதலாக கைத்தொலைபேசி வீசப்பட்டமை தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More