பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு செவ்வாய்க்கிழமை உள்ளங்கால்களில் வலியும், சுவாசக்கோளாறும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்.எஸ்.விஸ்வநாதன் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
0