செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 1,233 பேர் பாகிஸ்தான் கோடை வெப்பத்துக்கு பலி1,233 பேர் பாகிஸ்தான் கோடை வெப்பத்துக்கு பலி

1,233 பேர் பாகிஸ்தான் கோடை வெப்பத்துக்கு பலி1,233 பேர் பாகிஸ்தான் கோடை வெப்பத்துக்கு பலி

0 minutes read

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கோடை வெப்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 26 பேர் உயிரிழந்தனர். இத்துடன் பலியானோர் எண்ணிக்கை 1,233-ஆக அதிகரித்தது.
பாகிஸ்தான் பேரிடர் மீட்பு ஆணையத்தின் இயக்குநர் நாசர் முகமது இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
பாகிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் கடந்த ஒரு வார காலமாக கடும் கோடை நிலவி வருகிறது. கராச்சி நகரில் வெப்பத் தாக்குதலால் பாதிப்புற்று 1,923 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை சுமார் 65 ஆயிரம் பேர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
வெப்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 26 பேர் பலியாகினர்.
இத்துடன் பலியானோர் எண்ணிக்கை 1,233 ஆக அதிகரித்தது. கடந்த சில நாள்களாக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வெப்ப பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.