செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி

இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி

1 minutes read

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது:-  பூமி, சந்திரன், சூரியன் இடையே புவிஈர்ப்பு விசை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. இதனால் பூமி தன்னைத்தானே சுற்றிவர 86,400.002 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு நாளும் இவ்வாறு உள்ள கூடுதலான நேரம் பல ஆண்டுகளாக சேர்த்து கணக்கிடும்போது அது ஒரு வினாடி ஆகிறது. எனவே ஜூன் 30 அல்லது டிசம்பர் 31–ந்தேதிகளில் லீப் வினாடி கணக்கிடப்படும். இந்த ஆண்டு ஜூன் 30–ந்தேதி அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி வருகிறது. சாதாரண நாட்களில் சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் 23:59:59 முடிவடைந்தவுடன் அடுத்த நாள் 00:00:00 என தொடங்கும்.

ஆனால் இன்று 23:59:60 என கணக்கிடப்பட உள்ளது. அதன் பிறகே அடுத்த நாள் தொடங்குகிறது. அதன்படி இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும். என்று கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.