செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்த மட்டி மக்கொனென் காலமானார். அவருக்கு வயது 63.
செல்போன் மூலம் இன்று நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தியின் தந்தை என்று அழைக்கப்படும் இவர் பின்லாந்தை சேர்ந்தவர். கடந்த சிலநாட்களாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இந்த தகவலை பின்லாந்து பத்திரிகை செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மட்டி ம்க்கொனென் தனது கண்டுபிடிப்பு குறித்து பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது இந்த கண்டுபிடிப்பு தனது தனிப்பட்ட சாதனை அல்ல. ஒரு கூட்டு முயற்சி என தெரிவித்துள்ளார்.