செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் செவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறதுசெவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறது

செவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறதுசெவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறது

1 minutes read

செவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
“பிராண்ட்ல்-எம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த விமானத்தை, இந்த ஆண்டுக்குள் சோதித்துப் பார்க்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நாஸா விஞ்ஞானிகள் கூறியதாவது:
எதிர்காலத்தில், செவ்வாய் கிரத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலன்கள் தரையிறங்குவதற்காக விஞ்ஞானிகள் உத்தேசித்துள்ள இடங்கள், அதற்கு ஏற்றவைதானா என்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள, அந்தக் கிரகத்தின் மீது பறந்து செல்லக்கூடிய விமானத்தை நாஸா வடிவமைத்து வருகிறது.
செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்கலன், இந்த விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்லும்.
அங்கு செவ்வாய்க் கிரகப் பரப்புக்கு 2,000 அடி உயரத்தில் விண்கலனிலிருந்து இந்த விமானம் விடுவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து செவ்வாயின் வானில் அந்த விமானம் 32 மைல்கள் வரை பறந்து சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும். இந்த விமானத்தின் மாதிரித் தயாரிப்பு, இந்த ஆண்டுக்குள் சோதித்துப் பார்க்கப்படும்.
பூமிக்கு 1 லட்சம் அடி உயரத்தில், பலூன் ஒன்றிலிருந்து இந்த விமானம் சோதனை முறையில் பறக்க விடப்படும். அந்த உயரத்தில்தான், செவ்வாய்க் கிரகத்தின் வானத்தைப் போன்ற சூழல் நிலவுகிறது. பிற விமானங்களால் செயல்பட முடியாத அந்தச் சூழலில் மாதிரி விமானம் செயல்பட்டால், “பிராண்ட்ல்-எல்’ விமானத்தின் உருவாக்கம் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றனர் நாஸா அதிகாரிகள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.