அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியான ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940ம் ஆண்டு கணவன், மனைவி ஆனார்கள். 75 ஆண்டுகள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு ,சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைபாடால் இருவரும் அவதிப்பட்டு வந்தனர். அருகருகே படுக்கையில் இருந்த படி இருவரும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழக்க வேண்டும் என்ற ஆசையை தங்களது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே படுக்கைக்கு மாற்றப் பட்டனர்.
இருவரும் தங்களது ஆசைப் படியே ஒரே படுக்கையில் கைகோர்த்தபடி உயிரிழந்தனர். இந்தத் தம்பதிக்கு 5 குழந்தைகளும், 16 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் 6 பேர் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.