8
கொலம்பியாவில், முதல் முறையாக புற்றுநோயாளி ஒருவரை கருணைக் கொலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஓவிடியோ கான்ஸலெஸ் (79) என்பவர் மிகக் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிகிச்சை அளித்தும், குணப்படுத்த முடியாத நிலையில், அவரை கருணைக் கொலை செய்ய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரை கருணைக் கொலை செய்ய கொலம்பியா அரசு முதல் முறையாக அனுமதி வழங்கியுள்ளது.