செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்

துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்

0 minutes read

ஓட்டல் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, அரசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் துனிசியாவில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர்.

கடந்த வாரம் துனிசியாவின் தலைநகரான துனிஸ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவ்ஸி கடற்கரைப் பகுதி உள்நாட்டினர் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் தேடிவந்து தங்கி இளைப்பாறும் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இங்குள்ள இம்ப்ரியல் மர்ஹபா ஓட்டல் பகுதியில் திடீரென புகுந்த ஒரு தீவிரவாதி அங்கு கூடியிருந்த மக்களின் மீது இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் துனிசியா, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்ந்த 38 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலையை சமாளிக்கவும், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் பெஜி கைட் எசெப்சி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.