2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

2008 மார்கழி மாத காலப்பகுதியில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் புளியம்பொக்கனை சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு வரையிலான பாதையின் இரு மருங்கிலும் இடம்பெயர்ந்த பொது மக்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகள் நெருசலாக காணப்பட்டது. அங்கு பதட்டம் தொடர்ந்த வண்ணம் இருந்தது. பரந்தன் சந்திப்பகுதியில் அமைந்திருந்த கட்டிடத் தொகுதி செல் வீச்சினாலும் விமானக் குண்டு வீச்சினாலும் சின்னபின்னமாகிய காட்சி போரின் உக்கிரத்தை காட்சிப்படுத்தியது.
மறுமுனையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அண்மையில் சண்டைகள் அடிக்கடி நடந்தேறின. இரு போர் முனைகள் தவிர்ந்த இடைப்பட்ட பகுதியில் இருந்த மக்கள் எதிர்பாரத விதமாக செல்வீச்சு தாக்குதளை எதிர்நோக்கிய வண்ணம் இருந்தனர். அத்துடன் போரின் நடுவில் சிக்கிய மக்கள் மேலும் பல கடுமையான சூழ்நிலையை எதிர் கொண்டனர்.. போக்குவரத்து நெருசல், உணவுக் தட்டுப்பாடு அத்துடன் பருவ காலத்தில் பெய்யும் மழையினால் ஏற்ப்பட்ட வெள்ளம் என பல இடர்கள் அவர்களை தொடர்ந்த வண்ணம் இருந்தன.

தமிழ் நாட்டு அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்பப் போகின்ற செய்தி இடம்பெயர்ந்த பகுதி எங்கும் பரவியது. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தலைப்பு செய்தியாக தெரிவித்த வண்ணம் இருந்தன. அவ் உணவுப்பொருட்கள் வரப்போற செய்தியை கேட்ட இடம்பெயர்ந்த மக்கள் உதவி கிடைக்க போகின்றது என்ற சந்தோசத்திக்கு அப்பால் போர் மேகம் கலைந்துவிடும் என்ற கற்பனையில் பல மடங்கு சந்தோசத்தில் இருந்தனர்.
ஓமந்தை ஊடாக உலக உணவு திட்டத்திக்கு சொந்தமான பத்தொன்பது லொறிகளில் ஏற்றபட்ட உணவு பொருட்கள் புளியங்குளத்தின் ஊடக நெடுங்கேணி ஒட்டிசுட்டான் வழியாக இடம்பெயர்ந்த மக்கள் வாழும் இடங்களுக்கு சென்றடைவதாக திட்டமிடபட்டது. ஆயினும் புளியங்குளம் நெடுங்கேணி பாதையில் புளியங்குளத்திக்கு ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் பாதையை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருந்ததன் காரணத்தால் லொறிகளை கொண்டு செல்வதில் தடங்கள் ஏற்பட்டது. அதேவேளை புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த அப்பகுதிக்கு வந்த வேறு லொறிகளில் உணவு பொருட்கள் மீள ஏற்றி ஒருவாறு குறிப்பிட்ட இடத்திக்கு கொண்டு வரப்பட்டன.

தமிழ் நாட்டு அரசினால் வழக்கப்பட்ட உணவு பொருட்கள் புதுக்குடியிருப்பு மகாவித்தியலய பிரதான மண்டபத்தில் முல்லைத்தீவு மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட உணவு பொருட்கள் தற்காலிகமாக இறக்கி வைக்கப்பட்டன. அவ்வாறே கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான உணவு பொதிகள் தர்மபுரம் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வந்த கிளிநொச்சி அரச அதிபர் பணிமனை கட்டிட தொகுதியில் வைக்கப்பட்டன.
இரண்டு அரச அதிபர்களின் ஒருங்கிணைப்பில் கிராம உத்தியோகத்தர்கள் குடும்ப அட்டையில் பதிவுகளை மேற்கொண்டு உணவு பொதிகளை மக்களுக்கு வழங்கினர். பொது மக்கள் ஆங்காங்கே இயங்கிய பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் உணவு பொதிகளை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேற்படி உணவு பொதிகள் சுமார் ஆறுபதாயிரம் (60000) குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு தேவையான உணவு பொருட்கள் இருந்தன.
தமிழ் நாட்டு அரசினால் வழங்கப்பட்ட பொதியில் ஒரு பையில் அரிசி,மா,பருப்பு,சீனி போன்ற உணவு பொருட்களும் மறு பையில் வேட்டி, சாரம், துவாய், சேலை, போர்வை போன்றவையும் காணப்பட்டன. பின்னாளில் இந்த வேட்டி துணிகள் இறந்தவர்களின் உறவினர்களால் அவர்களின் உடல்கள் மீது போர்க்கபட்டு மரியாதை செலுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இன்னும் பல தடவைகள் இவ்வாறான உணவு பொருட்கள் வந்து சேரும் என பலரும் நம்பினார்கள். ஆனால், கண் பார்வைக்கு தெரியாத பல இரும்பு துண்டுகள் பல வடிவுகளில் இப்பகுதியை வந்து அடைந்து உயிர்களைக் காவு கொண்டன.
தொடரும்….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-35/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-36/