இலங்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக சரத் டி ஆப்ரு பணிபுரிகிறார். இவர் மீது அவர் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர் புகார் செய்தார். அதில், அவர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் பரபரப்பு எற்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதி சரத் டி.ஆப்ருவுடன் இணைந்து மற்ற நீதிபதிகள் பணிபுரிய கூடாது என வக்கீல் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அதை தொடர்ந்து நீதிபதி சரத் டி ஆப்ரு நேற்று போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இலங்கை வரலாற்றில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.