செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை வருமாறு கமலுக்குச் செந்தில் அழைப்பு!

இலங்கை வருமாறு கமலுக்குச் செந்தில் அழைப்பு!

0 minutes read

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்துக்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.
.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.