செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இளம் தம்பதி கொடூரமாக வெட்டிக்கொலை!

இளம் தம்பதி கொடூரமாக வெட்டிக்கொலை!

0 minutes read

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்த வீட்டின் அறையொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 வயதுடைய வசந்த, 27 வயதுடைய ரோஹிணி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் – மல்லவபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி நாரம்மலை பிரதேசத்திலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து அவர்கள் கழுத்திலும் உடலிலும் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டின் அறை இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

இருவரும் வன்முறைக் குழுவொன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிவானின் உத்தரவுக்கமைய சடலங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.