செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க முன்னாள் புலிகள் முடிவுஇலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க முன்னாள் புலிகள் முடிவு

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க முன்னாள் புலிகள் முடிவுஇலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க முன்னாள் புலிகள் முடிவு

1 minutes read

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பிரதான அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்காததால் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இணைந்து செயல்பட்டு வந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி கட்சி வேட்பாளர்களாக போட்டியிட மீள்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் சமீபத்தில் விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சியின் தலைமை, இந்த தேர்தலில் இது தொடர்பாக பரிசீலிக்க முடியாது. எதிர்வரும் பிற தேர்தல்களின்போது இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

வேட்பு மனு தாக்கல் வரும் 13-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் வேட்பாளர்கள் பட்டியல் பெறப்பட்டு, பரிசீலினையில் உள்ளது என உதயன், சுடரொளி போன்ற தமிழ் பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான நடேசப்பிள்ளை வித்யாதரன் அறிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலையான சுமார் 11 ஆயிரம் பேர் தற்போது அரசின் மீள்வாழ்வு மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.