செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 55 வயது காதலியின் நகைகளைத் திருடிய 28 வயது காதலன்!

55 வயது காதலியின் நகைகளைத் திருடிய 28 வயது காதலன்!

0 minutes read

55 வயதான காதலியிடம் தங்க நகைகளைத் திருடிய 28 வயது காதலனைக் களனிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் காதலன் பல வருடங்களாகக் குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனைக் கைது செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அவரிடமிருந்து தங்கப் பொருட்கள் எதனையும் மீட்க முடியவில்லை என்றும் களனிப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.