செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

1 minutes read

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் பகுதி நேர பணியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் இங்கிலாந்திற்கு வந்து படித்துக்கொண்டு பகுதிநேர பணியை செய்ய அந்நாட்டு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து இங்கிலாந்து குடியுரிமை மந்திரி ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியதாவது:–

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் அடுத்த மாதம் முதல் பகுதி நேரம் பணிபுரியும் உரிமையை தடை செய்துள்ளது. இச்சலுகையை பயன்படுத்தி குடியுரிமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். எனவே, ஐரோப்பிய யூனியன் நாடுகள்யின்றி பிற வெளி நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படுகிறது.

அதன்படி கல்வி பயில வருபவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வு மற்றும் நூற்றுக்கணக்கான போலி கல்லூரிகளின் உரிமைகள் நீக்கம், பகுதிநேர வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் விகிதம் குறைப்பு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. மேலும் வெளிநாட்டு மாணவர்கள் படித்து முடித்த பிறகு இங்கு தொடர்ந்து தங்க விசாவுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்று கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் என்று இங்கிலாந்து உள்துறை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.