2
சீனாவில் கடந்த 2013ம் ஆண்டு, ‘ஒரு குழந்தை’ திட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.
சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,075 தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.கடந்த மே மாதம் வரை வந்த விண்ணப்பங்களில் 38,798 தம்பதிகளுக்கு (92 சதவீதம்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் பீஜிங் நகர, சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு துறை தெரிவித்துஉள்ளது.