செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா“என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா

“என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா“என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” | கானா பாலா

1 minutes read

‘பதினோரு பேரு ஆட்டம்…’ என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. இப்படத்தை தொடர்ந்து ‘அட்டகத்தி’ படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி…’, ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…’ பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து மிகவும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல பாடல் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். பல பாடல்களுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். இவர் பாடலுக்காக மட்டும் பல படங்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியிருக்கிறது. கானா பாடல்கள் இல்லாத இடங்கள் இல்லை என்ற சூழ்நிலையில் தற்போது கானா பாலா பாடல்கள் எழுதுவதையும், பாட்டு பாடுவதையும் குறைத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறேன். என்னுடைய குரலில் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றது. சினிமாவில் நான் நன்றாக சம்பாதித்திருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். நான் வாய்ப்பு தேடி எங்கும் போவதில்லை. ஆனால், என்னைத் தேடி வந்த வாய்ப்பை விடுவதில்லை’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.