செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடுஅமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடு

அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடுஅமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடு

1 minutes read

அமெரிக்காவில் பணி புரிந்த 200 இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடுவழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005–ம் ஆண்டு அமெரிக்காவை கத்ஜீனா சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கச்சா எண்ணை எடுக்கும் மேடை சேதமடைந்தது. அதை சரிசெய்ய இந்தியாவில் இருந்து 200 தொழிலாளர்களை சிக்னல் நிறுவனம் அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

அவர்கள் வெல்டர்கள், பிளம்பர்கள், பைப் பிட்டர்கள், எலெக்ட்ரீசியன்கள் உள்ளிட்ட பணி செய்பவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு கிரீன் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை போன்ற வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். எனவே, வேலைக்கு ஆள் சேர்த்த புரோக்கர்களுக்கு ரூ.52 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இந்திய தொழிலாளர்கள் கட்டணம் செலுத்தினர்.

தங்கள் சொத்துக்கள் மற்றும் நகைகளை விற்று பணம் கொடுத்தனர். ஆனால் உறுதி அளித்தபடி சம்பளமோ, குடியிருப்பு வசதிகளோ செய்து தரவில்லை. அவர்களை அடிமைகள் போன்று நடத்தினர்.

அதை தொடர்ந்து குடிமக்கள் உரிமை சட்ட நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை 9 ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு அலபாமாவை சேர்ந்த சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.126 கோடி நஷ்ட ஈடுவழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.