செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் நாளை இலண்டனில் மீண்டும் தூவானம் திரைப்படம்

நாளை இலண்டனில் மீண்டும் தூவானம் திரைப்படம்

1 minutes read

வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் கலாநிதி ரதிதரன் இயக்கத்தில் ஈழத்துக்கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள தூவானம் திரைப்படம் பிரித்தானியாவில் மூன்றாவது தடவையாகவும் இலண்டனில் இரண்டாவது தடவையாகவும் நாளை (02/07/23) ஞாயிற்றுக்கிழமை அன்று காட்சிப்படுத்த உள்ளது. கடந்த ஜூன் மாதம் 4ம் திகதி கிளி பீப்பிள் ஏற்பாட்டில் இலண்டனில் முதன்முதல் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டபோது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளவாலை மக்கள் ஒன்றியத்தின்(அறக்கட்டளை UK) பங்களிப்புடன் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த திரையிடலுக்கு ஆர்வம் உள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

அத்துடன் அவர்களால் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;
இந்தத் திரைப்படத்துக்கு உங்களுடைய முழுமையான ஆதரவை தந்து உதவுங்கள். இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் ஆதரவு ஈழத்து  கலைஞர்களை ஊக்கிவிப்பதோடு இளவாலை மக்கள் ஒன்றியத்தின் அறக்கட்டளையினால் (Uk) மறைந்த Dr Mohan அவர்களின் ஞாபகார்த்தமாக மிகப்பெரிய அளவில் அமைய பெற்றுக் கொண்டிருக்கும் உள்ளக விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த  அரங்கு  யாழ் மாவட்டத்திலுள்ள எல்லோராலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.  இதற்கு உங்களுடைய முழுமையான ஆதரவை எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நுழைவுச்சீட்டு விபரம்
தனிநபர்  £15
ஒரு குடும்பத்தில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் £10 each
VIP £25தொடர்புகளுக்கு
தயாநிதி- 07960948245
லலிதா- 07842164680
பாலன்- 07985160388
இராமச்சந்திரன் – 07769701139

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.