செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா – கியூபா இடையே தூதரக உறவு 54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா – கியூபா இடையே தூதரக உறவு

54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா – கியூபா இடையே தூதரக உறவு 54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா – கியூபா இடையே தூதரக உறவு

1 minutes read

பனிப் போர் காலத்திலிருந்தே பகை நாடுகளாக இருந்து வந்த அமெரிக்காவும், கியூபாவும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு இடையிலான தூதரக உறவை அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை தொடங்கின.
இதையடுத்து, நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த இரு நாடுகளின் தூதரங்களும் திறக்கப்பட்டன.
பகை நாடுகளிடம் நட்புறவை ஏற்படுத்தும் அதிபர் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கியூபாவுடன் இத்தனை ஆண்டு காலம் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்ததால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என அமெரிக்க அரசு உணர்ந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே நட்புப் பாதையை அந்த நாடு தேர்ந்தெடுத்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியூபாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் அந்த நாட்டில் ஜனநாயக மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு: அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வாஷிங்டனிலுள்ள புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் கியூபா தூதரகம் செயல்படவிருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியே பறக்கும் கொடிகளின் வரிசையில், கியூபாவின் தேசியக் கொடியும் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – கியூபா இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பை, ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது இரு தரப்புத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
“இது வெறும் தொடக்கம்தான்’: நீண்ட காலத்துக்குப் பிறகு அமெரிக்காவும், கியூபாவும் தங்களது உறவைப் புதுப்பித்துக் கொண்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான நல்லுறவு மலர்வது அவ்வளவு எளிதானதாக இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது வெறும் தொடக்கம்தான் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு மறைய நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.