செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?

விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?விஜய்யின் 60–வது படமாக குஷி 2–ம் பாகம்?

1 minutes read

விஜய், ஜோதிகா நடித்து 2000–ம் ஆண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் குஷி. எஸ்.ஜே. சூர்யா இயக்கினார். காதல் கதையம்சம் உள்ள படமாக வந்தது.

இந்த படத்தில் ‘மக்கரீனா மக்கரீனா’, ‘மேகம் கருக்குது’, ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’, ‘ஓ வெண்ணிலா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்’ போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்று இருந்தன.

தற்போது குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 2–ம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எஸ்.ஜே. சூர்யா உருவாக்கி விட்டாராம். விஜய்யிடமும் அந்த கதையை சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் பட வேளைகளை துவங்க திட்டமிட்டு உள்ளார்.

விஜய் தற்போது ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. ‘குஷி’ 2–ம் பாகத்தில் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விஜய்யின் 60–வது படமாக இருக்கும் என தெரிகிறது.

கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வில் எஸ்.ஜே. சூர்யா ஈடுபட்டு உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.