இலங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, முன்னாள் அதிபர் ராஜபட்ச தனது கையைப் பிடித்து இழுத்த தொண்டரை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரச்ச தொகுதியில் பிரசாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரசார மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த ராஜபக்சவின் கையை ஒரு தொண்டர் பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்ச தொண்டரை தாக்க முயன்றார். ஆனால், தொண்டர்கள் அவரை தள்ள, இதில் கீழே விழப் போன ராஜபக்சவைப் பிடித்துக் கொண்ட உடன் வந்தவர்கள், அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.