துருக்கி நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்து இன போராளிகளை தேடும் வேட்டையை போலீஸ் அதிரடியாக நடத்தியது.
அந்த நாட்டின் 13 மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் மொத்தம் 251 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து துருக்கி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாத குழுக்களை எந்தவித பாகுபாடுமின்றி ஒடுக்குவதற்கு துருக்கி உறுதியாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் 4 இடங்களை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இதன் சேத விவரம் வெளியிடப்படவில்லை.