செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி விபத்து | உயிரிழந்தோர் 31-ஆக உயர்வுசரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி விபத்து | உயிரிழந்தோர் 31-ஆக உயர்வு

சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி விபத்து | உயிரிழந்தோர் 31-ஆக உயர்வுசரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி விபத்து | உயிரிழந்தோர் 31-ஆக உயர்வு

0 minutes read

எகிப்தின் நைல் நதியில் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 13 பேரது சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆகியுள்ளது.
எகிப்துத் தலைநகர் கெய்ரோவிலுள்ள வாராக் என்ற பகுதியில், சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் புதன்கிழமை நள்ளிரவு மோதியது.
இதில் பயணிகள் படகு கடுமையாகச் சேதமடைந்து நதிக்குள் மூழ்கியது.
இதில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தாலும், சுகாதாரத் துறை அமைச்சர் அப்தெல்-கஃபார் விபத்தில் 18 பேர் பலியானதாக அறிவித்தார். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் 3-ஆவது நாளாகத் தொடர்ந்த மீட்புப் பணிகளில் மேலும் 13 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகவும், இத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகியுள்ளதாகவும் எகிப்தின் அல்-அஹ்ரம் இதழ் தெரிவித்தது.
விபத்துக்குள்ளான படகில் சுமார் 35 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.