செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி நடவடிக்கை | துணை பிரதமரையும் 4 மந்திரிகளையும் பதவியிலிருந்து நீக்க உத்தரவு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி நடவடிக்கை | துணை பிரதமரையும் 4 மந்திரிகளையும் பதவியிலிருந்து நீக்க உத்தரவு

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி நடவடிக்கை | துணை பிரதமரையும் 4 மந்திரிகளையும் பதவியிலிருந்து நீக்க உத்தரவு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி நடவடிக்கை | துணை பிரதமரையும் 4 மந்திரிகளையும் பதவியிலிருந்து நீக்க உத்தரவு

1 minutes read

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், 2009-ம் ஆண்டு, ‘1 எம்.டி.பி.’ என்றழைக்கப்படுகிற ‘ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ என்ற ஒன்றை அரசு அமைப்பாக தொடங்கினார். இது மலேசியாவின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான உத்தியை வகுக்கவும், உலகளாவிய பங்குதாரர்களை பெறவும், அன்னிய நேரடி முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வரவும் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் சுமார் 700 மில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.4,480 கோடி) தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் பிரதமர் நஜீப் ரசாக் சட்ட விரோதமாக மாற்றிக்கொண்டு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் நஜீப் ரசாக் மறுத்து வந்தார்.

ஆனாலும் உள்நாட்டில் இந்த குற்றச்சாட்டு குறித்து பல தரப்பிலும் விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக மலேசியாவின் துணை பிரதமர் முகைதீன் யாசின், கடுமையாக விமர்சித்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நஜீப் ரசாக் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்த ஊழல் விவகாரத்தை சரியாக கையாளாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற முடியாது என அவர் கடந்த வார இறுதியில் காட்டமாக கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், அவரையும், மேலும் 4 மந்திரிகளையும் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார்.         இது தொடர்பாக அவர் டெலிவிஷனில் நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, “கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் அதை பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்துவது என்பது அரசின் கூட்டுப்பொறுப்பு என்ற கொள்கைக்கு எதிரானது” என கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “முகைதீன் யாசினை மாற்றுவது என்பது கடினமான முடிவுதான். ஆனால் சரி என தோன்றுவதை சரியாக செய்வதுதான் நல்ல தலைமை. இருந்தபோதிலும், இதுவரை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் செய்த பணிகளுக்காக, அர்ப்பணிப்புகளுக்காக முகைதீன் யாசினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீக்கப்பட்ட பிற மந்திரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” என கூறினார்.

பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அட்டார்னி ஜெனரல் அப்துல் கனி பட்டாயிலும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி நீக்கங்கள், மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.