இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட 5 பேரை, இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவரும், நாட்டின் அதிபருமான மைத்ரிபாலா சிறீசேனா இடைநீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறீசேனா அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து அர்ஜுன ரணதுங்க, ரஜிதா சேனரத்னே, குணவர்த்தனே, எஸ்.பி.நவீன்னே, மேற்கு மாகாண கவுன்சிலர் ஹிருனிகா பிரேமசந்திரா ஆகியோர் இடைநீக்கம் செய்யட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இவர்கள் ஐந்து பேரும் சிறீசேனாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டனர். எனினும், அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
ஊழல் நபர்களின் குழுவில் எங்களால் இருக்க முடியாது. அதனால், மஹிந்த ராஜபட்சவை எதிர்க்கும் நோக்கம் கொண்டவர்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார்.
3