உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்றை சீனா உருவாக்கிவருகிறது.
எப்.ஏ.எஸ்.டி. என சுருக்கமாக அழைக்கப்படும் வானொலி தொலைநோக்கி, தற்போது சீனாவின் தென்மேற்கிலுள்ள கிஸோ மாகாணத்தில் மலைப்பகுதியில் பொருத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.2 பில்லியன் யுவான் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த தொலைநோக்கியின் பணி 2016ம் ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொலை நோக்கியானது சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும் திறன் பெற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொலைநோக்கி 30 கால்பந்து மைதானத்தின் அளவை கொண்டது என கூறப்படுகிறது.